திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் முன்னிலையில், விசிக வில் இணைந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர்...
பொன்னேரி, ஆக. 11 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர், பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு புதியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் நீலமேகம், மரியாதை...
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …
மீஞ்சூர், ஆக. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது.
மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...
செப்டம்பர் மாதம் முதல் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் செயல்பாட்டிற்கு வரும் இணையதள வசதி ….
திருவள்ளூர், ஆக. 09 –
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் இணைதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டம். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது இம்மாவட்டத்தில் அதற்கான பணி முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இணையதள இணைப்பு வழங்கும் பணியானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம்...
பிரசித்திப் பெற்ற மூன்று முருகன் திருக்கோயில்களில் நடைப்பெற்ற ஆடிக்கிருத்திகை சிறப்பு பூஜைகள் : ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த...
பொன்னேரி, ஆக. 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு பாலகுமார சுவாமி திருக்கோவில் ஆகிய இம்மூன்று திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும்...
ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து … உடனடியாக மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய ஆசிரியர்கள்...
திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் அப்பள்ளியில் 100 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், அப்பள்ளியில் இன்று காலை கேஸ் சிலிண்டர் தீர்ந்ததால் மற்றொரு கேஸ் சிலிண்டரை தனியார் கேஸ்...
மத்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதிக்காததால் மீண்டும் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 30 உயரும் அபாயம்...
திருவாரூர், ஆக. 09 -
அரசி விலையினை கட்டுப்படுத்துவதற்காகவும், மேலும் விலையினை குறைப்பதற்காகவும், மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்துள்ளது. இருப்பினும் அதில் பச்சரசிக்கு மட்டுமே அத்தடையினை விதித்து இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும் தமிழ்நாடு அரிசி அரவை ஆலை...
சிகரெட் கடன் தர மறுத்த எருக்காட்டூர் பெட்டிக் கடைக்காரருக்கு அடி உதை : இரண்டு வாலிபர்களை கைது செய்து...
திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கண்மணி ஆவார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மணி வைத்துள்ள பெட்டிக்கடையில் வினோத் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அக்கடைக்கு வந்து, சிகரெட் கடன் கேட்டுள்ளார்கள்...
குருவை சாகுபடி செழிக்கவும், மழைவளம் பெருகவேண்டியும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைப்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் …
திருவாரூர், ஆக. 09 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி...
சுவாமிமலை திருக்கோயிலில் தங்ககவசம் வைரவேலுடன் அருள்பாலித்த அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி : தரிசனத்திற்காக காலை முதல் அலை மோதிய பக்தர்கள்...
கும்பகோணம், ஆக. 09 –
ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் ஆலயங்களிலும் இன்று காலை முதலே தரிசனத்திற்காக திரளான முருகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனுக்கு நடைப்பெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகரைக் காண அலை...
கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் ஒளிப்பரப்பப்பட்ட ஒளிப்படம்...
திருவாரூர், ஆக. 08 -
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான...

























