திருவாரூர், ஆக. 09 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில், இந்த ஆண்டு குருவை சாகுபடி செழிக்க வேண்டியும், மழை வளம் பெருக வேண்டியும், கந்தசஷ்டி கவசம் படித்துக் கொண்டே சுப்பிரமணியசாமி ஆலயத்தை மூன்று முறை வலம் வந்தனர்.
இதில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி பாராயணத்தை படித்துக் கொண்டே மூன்று முறை வலம் வந்தனர். அதன் பிறகு சுப்பிரமணிய சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்களும், அருசுவை உணவும் வழங்கப்பட்டது.





















