புதுடெல்லி:

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.

இன்று காலை விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அபிநந்தனை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார்.
முன்னர் அபிநந்தன் கூறியதாக வந்த வீடியோ பதிவுகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை துன்புறுத்தவில்லை. நல்லமுறையிலும், கண்ணியமாகவும் பார்த்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக பிரபல செய்தி நிறுவனம் இன்று மாலை தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here