கும்பகோணம், ஜூன். 03 –

கும்பகோணத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காவல்துறை கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவுபடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் கிழக்கு-மேற்கு தாலுக்கா பட்டீஸ்வரம் சுவாமிமலை போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்ட கும்பகோணம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் நூற்றுக்கு மேற்பட்ட காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம் ராஜ்மஹாலில் நடைபெற்றது.

இந்த முகாமில் கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பல்வேறு கண் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்து நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. சிலருக்கு மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

மேலும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கிய உடல்நல காப்பீடு ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் பணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் மேலும் அனைத்து தனியார் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று அகர்வால் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here