பொன்னேரி, ஆக. 11 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர், பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு புதியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் நீலமேகம், மரியாதை நிமித்தமாக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தும், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அந்நிகழ்வின் போது மீஞ்சூர் பொன்னேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை நீலமேகம் முன்னிலையில் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவருடன் தொகுதி செயலாளர் சேகர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் உமாபதி, மீஞ்சூர் நகர செயலாளர் சந்திரசேகர், பொன்னேரி நகர பொறுப்பாளர்கள் வினோத், ஜெகதீசன் உள்ளிட்ட திரளான கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.























