பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையில் 2 ஆயிரம் கோடி டாலர் அளவில் புதிய ஒப்பந்தம்
இஸ்லமாபாத்:
சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத் இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று பாகிஸ்தான் வந்தார்.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் இஸ்லாமாபாத் வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது...
பயங்கரவாதிகள் தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் பலி-பாகிஸ்தான் தூதருக்கு ஈரான் அரசு சம்மன்
டெஹ்ரான்:
இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்-இ-முகமது என்ற பயங்கரவா அமைப்பினர் பொறுப்பெற்றனர்.
இந்த நிலையில், ஈரானிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்....
ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
மாலே:
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்....
இந்தியா-மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள்- சுஷ்மா முன்னிலையில் கையொப்பமானது
ரபாட்:
அரசுமுறை பயணமாக மொராக்கோ நாட்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில்...
பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடக்கம்
இஸ்லாமாபாத்:
புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான பூசல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்பில் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆவலுடன் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை ‘ஹேக்கர்கள்’...
பல்கேரியா-இந்தியா உறவுகளை மேம்படுத்த சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
சோபியா:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்கட்டமாக நேற்று பல்கேரியா தலைநகர் சோபியா வந்தடைந்த அவர் பல்கேரியா வெளியுறவுத்துறை மந்திரி எக்கடெரினா ஸ்ஹரியேவா-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக, எட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன்...
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்-எதிர்த்து வழக்கு தொடர சமூக குழுக்கள் முடிவு
வாஷிங்டன்:
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.
ஆனாலும்...
மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலை: இருவருக்கு மரண தண்டனை-2 பேருக்கு சிறைத்தண்டனை
யாங்கோன்:
மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள்...
காஷ்மீர் தாக்குதல்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்
டாக்கா:
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இது...
தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திருநங்கை
பாங்காக்:
தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த...
























