டாக்கா:

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், ‘புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு உயிரிழந்த வீரர்களுக்கு வங்கதேச மக்கள் சார்பிலும், என் சார்பிலும், அரசு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி ஷரியர் ஆலமும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here