கும்பகோணம், ஏப். 24 –
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தனிப்பிரிவு ஏட்டு மாரியப்பன் ஆகியோர் தலைமையில் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் வீரா நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குட்கா மற்றும் ஹான்ஸ் இருப்பதாக தகவலின் அடிப்படையில் அந்த வீட்டிற்குச் சென்று சோதனையிட்டு சுமார் 150 கிலோவுக்கு மேல் குட்கா மற்றும் ஹான்ஸ் இருப்பதை கண்டுபிடித்து உடனே பறிமுதல் செய்யப்பட்டதுடன்அவைகளை பதுக்கி வைத்திருந்த தஷிணாமூர்த்தி என்பவரை கைது செய்தனர்


















