ராசிபுரம், மார்ச். 27-
ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சம் மதிப்பில் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி ஒப்படைக்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் பங்கேற்று 40 கிராம் எடைக்குள் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு நகைகளை திருப்பி வழங்கினர்.
இதில் ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பாளையம் சாலை ஆகிய நகர கூட்டுறவு வங்கி கிளைகளில் நகை கடன் பெற்ற 1304 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 78 லட்சத்து 28 ஆயிரத்து 528 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழ்கள், மற்றும் நகைகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. இவ்விழாவில், நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா, நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





















