அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை – டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்:
அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை...
கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள் ஓட்டம்
கலி:
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வல்லே டெல் கயூகா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 2.19 மணியளவில் பூமி குலுங்கியது.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில்...
ஈரான்: நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
டெஹ்ரான்:
ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் - கோம் நெடுஞ்சாலை வழியாக இன்று சுமார் 50 பயணிகளுடன் வந்த ஒரு பஸ், கெர்மான் நகரின் மத்திய பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும்,...
பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் – பாகிஸ்தானுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டிப்பு
இஸ்லாமாபாத்:
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இது ஐ.நா....
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது-டிரம்ப் விளக்கம்
வாஷிங்டன்:
காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்பின் அலுவலகத்தில் அவரிடம் பேட்டி கண்ட செய்தியாளர்கள், காஷ்மீர் தாக்குதலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து கேள்வி எழுப்பினர்....
மாட்டிறைச்சி மீதான வரியை நீக்குங்கள்-சீனாவுக்கு டிரம்ப் வேண்டுகோள்
வாஷிங்டன்:
உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு மேல் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள்...
ஏமனில் ஏவுகணை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி
சனா:
ஏமனில் அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 4 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாட்டு கூட்டுப்படைகள் அங்கு வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சாடா மாகாணத்தில் சவுதி அரேபியாவின் எல்லையையொட்டி உள்ள அல்-புக்கா நகரில் ராணுவ...
மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலை: இருவருக்கு மரண தண்டனை-2 பேருக்கு சிறைத்தண்டனை
யாங்கோன்:
மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள்...
நேபாளத்தில் அதிவேகமாக சென்ற ஜீப் ஆற்றில் கவிழ்ந்தது-11 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு:
நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு நேற்று இரவு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் இருந்து உருண்டு, 130 அடி ஆழத்தில் உள்ள மகாகாளி ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர்...
அந்தமான் அருகே வங்கக்கடலில் மீண்டும் நிலநடுக்கம்
போர்ட்பிளேர்:
வங்கக்கடலில் நேற்று சென்னைக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டது. 5.1 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு வட அந்தமான் போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் லேசாக உணரப்பட்டது.
இந்தநிலையில் இன்று அந்தமான் தீவுகள் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது....

















