Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள் ஓட்டம்

கலி: தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வல்லே டெல் கயூகா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 2.19 மணியளவில் பூமி குலுங்கியது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில்...

ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

மாலே: இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார்....

மியான்மர் தலைவர் சூகியின் ஆலோசகர் கொலை: இருவருக்கு மரண தண்டனை-2 பேருக்கு சிறைத்தண்டனை

யாங்கோன்: மியான்மர் அரசின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவரது ஆலோசகராகவும், பிரபல வக்கீலாகவும் இருந்த கோ னி (வயது 63), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கி லின் என்பவரை உடனடியாக கார் டிரைவர்கள்...

கனடாவில் தீ விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி

டொரண்டோ: கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் நள்ளிரவில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறினர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். ஒரு...

சவுதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்-அரசுக்கு வலுக்கும் கண்டனம்

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் எங்கு செல்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் ஒரு செயலியை (ஆப்), கடந்த சனிக்கிழமை அன்று அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்....

ராணுவம் அதிரடி தாக்குதல்: 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

பாக்தாத்: ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில்...

ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம்

லண்டன்: லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைய விரும்பிய அவர்கள், முதலில் துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளனர். அந்நாட்டில் ஆன்லைன் மூலம்...

அந்தமான் அருகே வங்கக்கடலில் மீண்டும் நிலநடுக்கம்

போர்ட்பிளேர்: வங்கக்கடலில் நேற்று சென்னைக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டது. 5.1 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு வட அந்தமான் போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் லேசாக உணரப்பட்டது. இந்தநிலையில் இன்று அந்தமான் தீவுகள் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது....

இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்-டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது...

இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு-3 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், நேற்று முன்தினம் மாலை தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS