இலங்கை, செப். 05 –
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு அரசாணையை வெளியிட்டார். அவ்வாணையில் மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன நேற்று முன் தினம் முதல் அமலுக்கு வரும் வகையில் அவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப் படுத்தப்படுத்தியுள்ளார். மேலும், ஜனாதிபதி வெளிட்டுள்ள இவ்வாணை பற்றிய தகவலை அவரது செயலாளர் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.



















