இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு இம்ரான்கான் கட்டளை
இஸ்லாமாபாத் :
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் இறந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான்...
மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவித்தது தென்கொரியா
சியோல்:
இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 2 நாள்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ள...
மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்-மோடி வலியுறுத்தல்
சியோல்:
இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான ’சியோல் அமைதி விருது’ சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தற்போது அரசுமுறைப் பயணமாக தென்கொரியா வந்துள்ள...
சவுதி இளவரசருக்கு தங்க துப்பாக்கி வழங்கிய பாகிஸ்தான் எம்.பி.க்கள்
இஸ்லாமாபாத்:
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவரது அழைப்பின் பேரில் சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவுத், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையில் சுமார் 2 ஆயிரம் கோடி...
கனடாவில் தீ விபத்து-ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பலி
டொரண்டோ:
கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் நள்ளிரவில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறினர்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் அந்த வீட்டில் தங்கியிருந்த 7 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். ஒரு...
சிரியாவில் பொதுமக்களை பலி வாங்கிய இரட்டைக் குண்டுவெடிப்பு- ஐநா சபை கடும் கண்டனம்
நியூயார்க்:
சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் பலியாவது தொடர்கிறது. கடந்த திங்கட்கிழமையன்று இட்லிப் நகரின் அருகே உள்ள அல்குசார் பகுதியில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் பலத்த காயங்களுடன்...
புல்வாமா தாக்குதல் கொடூரமானது-அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்
வாஷிங்டன்:
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, “புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. அது குறித்த...
காஷ்மீர் தாக்குதலில் 40 வீரர்கள் பலி: மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்
பாரீஸ்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அசார் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. தற்போது இவன்...
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்-9 பேர் பலி
லாகோஸ்:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சில ஆண்டுகளாக நைஜீரிய அரசினை எதிர்த்து போகோ ஹராம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதல்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நைஜீரியாவின் பனி யாட் வடகிழக்குப் பகுதியில்...
சவுதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்-அரசுக்கு வலுக்கும் கண்டனம்
ரியாத்:
சவுதி அரேபியாவில் உள்ள ஆண்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் எங்கு செல்கிறார்கள், இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் ஒரு செயலியை (ஆப்), கடந்த சனிக்கிழமை அன்று அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்....






















