Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அபிநந்தனின் பாதுகாப்பிற்காக லாகூரியில் தங்கியிருந்து ஆய்வு செய்த இம்ரான்கான்

போர் கைதியாக பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். அதன் பிறகு அவர் அபிநந்தனின் விடுதலை எப்படி நடைபெறும் என்பதை கேட்டு அறிந்தார். அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். பாகிஸ்தானியர்களிடம் சிக்கியதும் தாக்குதலுக்கு...

நெருக்கடிக்கு பணிந்து மசூத் அசார் சகோதரர் உள்பட 44 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கைது செய்தது

இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 14-2-2014 அன்று ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவுபெற்ற பயங்கரவாத நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. பாகிஸ்தானில்...

கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரை சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி. இவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரது கர்ப்பபையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு...

இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க உதவுங்கள்-ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம்

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் இந்த பதிலடி எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு...

ராணுவம் அதிரடி தாக்குதல்: 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

பாக்தாத்: ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில்...

தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 5 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர்கள். தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது....

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஜா பற்றி துப்பு கொடுத்தால் ரூ.7 கோடி பரிசு – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். பின்லேடனுக்கு...

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்த நடவடிக்கை

பீஜிங்: ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதை சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் மீறியது என புகார் எழுந்தது. மேலும், அந்த நிறுவனத்தின்மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தி உள்ளது. இந்த நிலையில், கனடாவின் வான்கூவர் நகர விமான நிலையத்தில் ஹூவாய் நிறுவன...

அணு ஆயுதங்களை கைவிடும் வரையில் வடகொரியாவுக்கு எதிர்காலம் இல்லை – டிரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை...

போர் வேண்டாம்- அபினந்தன் விடுதலைக்காக குரல் கொடுத்த பாகிஸ்தான் மக்கள்

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தகர்த்தது. தங்கள் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவியதால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், பதில் நடவடிக்கையாக இந்திய எல்லைக்குள் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS