மீஞ்சூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
75 வது இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு, வல்லூர், நெய்தவாயல், கல்பாக்கம், நாலூர், நந்தியம்பாக்கம் வல்லூர், சுப்பாரெட்டிபாளையம், உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் சுகந்தி வடிவேல், பிரியங்கா துரைராஜ், பாலன், கலாவதி நாகராஜன், சதாசிவம், உஷா ஜெயக்குமார், உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர் அதில் கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் தொழிலாளர்கள் மதிப்பீடு, இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி, செலுத்துதல் சாலை வசதி, குடிநீர், மின்விளக்கு, சுடுகாடு செல்லும்பாதை, பள்ளிச் செல்லும் சாலை மின்சார ஒயர்களை சரி செய்தல், தூய்மை பணியாளர்களை கௌரவித்தல் விளையாட்டுத் திடல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவ்வூர் மக்கள் முன் வைத்தனர். பின்பு அவைகள் அனைத்தும் தீர்மானங்களாக அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கல்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் , சுப்பாரெட்டி பாளையத்தில் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்தினை நிறுவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்பு தேசியக் கொடியினை ஏற்றி கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர் இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் நந்தியம்பாக்கம் கதிரவன், நெய்தவாயல் ராஜா, அத்திப்பட்டு துணைத் தலைவர் எம்.டி. ஜி.கதிர்வேல், நாலூர் சகாதேவன், கொண்டக்கரை ஆர்.எல்.ரமேஷ் உள்ளிட்டவர்களும் மற்றும் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அவ்வூர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.























