இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நீக்குவோம்-டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்:
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படுவது...
இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு-3 பேர் பலி
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், நேற்று முன்தினம் மாலை தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு...
பின்லேடன் மகனின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டோம்-சவுதி அரேபியா அறிவிப்பு
துபாய்:
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
பின்லேடனுக்கு...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிசை சிறந்த போட்டியாளர்- டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது...
கர்ப்பபையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்ஸெக்ஸ் நகரை சேர்ந்தவர் பீதன் சிம்சன் (வயது 26). 5 மாத கர்ப்பிணி.
இவர் கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையின்போது அவரது கர்ப்பபையில் இருந்த கருக்குழந்தை முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த முதுகுத்தண்டு பிரச்சினையோடு...
இன்று முதல் கொழும்பிலுள்ள தாமரை கோபுரம் பொதுமக்கள் பார்வையிட திறப்பு …
கொழும்பு, செப். 15 -
கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தினை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி அதனை அந்நாட்டு அரசு திறந்து உள்ளது.
இன்று முதல் இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் தாமரை கோபுரத்தினை காண்பதற்கு அம்மயத்தில் உள்ள தரை தளத்தில் அனுமதி சீட்டினை பெற்று பார்வையிட முடியும்....
சிரியாவில் அரசுப்படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்-21 வீரர்கள் பலி
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது...
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்த நடவடிக்கை
பீஜிங்:
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதை சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் மீறியது என புகார் எழுந்தது. மேலும், அந்த நிறுவனத்தின்மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சுமத்தி உள்ளது.
இந்த நிலையில், கனடாவின் வான்கூவர் நகர விமான நிலையத்தில் ஹூவாய் நிறுவன...
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி-1,112 பேரை கைது செய்ய உத்தரவு
அங்காரா:
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.
அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப்...
சார்ஜா சென்ற இந்திய தம்பதி கார் விபத்தில் பரிதாப பலி
சார்ஜா:
இந்தியாவைச் சேர்ந்த வினோத்பாய் படேல்(47), ரோகிணிபேகன் வினோத்பாய் படேல்(42), சார்மி(13), மானவ்(9), யோகேஷ், மேக்னா, தீபக் படேல், வைஷாலி ஆகியோர் விடுமுறை நாட்களை கொண்டாட சார்ஜா வந்திருந்தனர். இவர்கள் குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த செவ்வாய்க்கிழமை சார்ஜாவில் அனைவரும் காரில் சுற்றுப்பயணம்...


















