சென்னை, டிச. 01 –

தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், மற்றும் இராசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு பெய்த சாதகமான பருவமழையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒன்றிய அரசிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு நவ 2022 மாதத்தில் 1,01,276 மெ.டன் யூரியாவும், 14, 263 மெ.டன் டி.ஏ.பி உரமும், 15,472 மெ.டன் பொட்டாஷ் உரமும், 68 248 மெ.டன் காம்பளக்ஸ் உரங்களுமாக மொத்தம் 1,99,259 மெ.டன் இராசாயன உரங்கள் வரப்பெற்றுள்ளன எனவும்,

இதனால் தமிழகத்தில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவத்தில் இதுவரை 36,725 இலட்சம் ஏக்கர் பரப்பில் நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும், 6.4 லட்சம் ஏக்கரில் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் தற்போது அனைத்துப் பயிர்களும் நன்கு வளர்ந்து, மேலூரமிடும் பருவத்தில் உள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதனைக் கருத்தில் கொண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை உரிய நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் வழங்குவதற்கு ஒன்றிய அரசு, கிரிப்டோ மற்றும் கொரமண்டல் போன்ற உர நிறுவனங்களிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தியதின் அடிப்படையில் தூத்துக்குடி  மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 90, ஆயிரம் மெ.டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு காவேரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போர்க்கால அடிப்படையில் இரயில் மற்றும் லாரிகள் மூலமாக விநியோகம்ம் செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து அரசு சார்பில் எடுத்து வரும் தொடர் நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் வேளாண்மை துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் சதனையை 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிகப் பட்சமாக 1,18,778 மெ.டன் யூரியா உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30.11.2022 வரை தமிழ்நாட்டில் 81,913 மெ.டன் யூரியா, 33, 629 மெ.டன், டி.ஏ.பி, 32,296 மெ.டன் பொட்டாஷ், 1,59,069 மெ.டன் காம்பளக்கஸ் உரங்கள் இருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான உரங்களை வேளாண் உழவர் மக்கள் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளாலாம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உர பதுக்கலை தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப் படுத்துப்பட்டுள்ளதாகவும், தற்போது, பருவமழை பெய்து வருவதாலும், மேகமூட்டமாக இருப்பதாலும் தேவைக்கும் அதிகமாக உரமிட்டால் சாகுபடி செலவு உயர்வதுடன் பச்சி, நோய் தாக்குதலும் அதிகமாகும் என்பதால் விவசாயிகள் பயிர் தேவைக்கு அதிகமாக உரமிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here