கலிபோர்னியா:

அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிரைக் கோலே (71). கடந்த 1978-ம் ஆண்டு தனது காதலி ரோன்டா விச்ட். அவரது 4 வயது மகன் டொனால்டு ஆகிய 2 பேரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் குற்றவாளி இல்லை என அவர் வாதிட்டார்.

இருந்தும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பரோல் எதுவுமின்றி தண்டனை அனுபவித்தார். இந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு அவரை கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் கருணை அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் விடுதலை செய்தார்.

அதன்பின்னர் அவர்தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வாதாடினார். அதில் அவர் குற்றமற்றவர் என்றும், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.150 கோடி (21 மில்லியன் டாலர்) இழப்பீடு வழங்க நஷ்டஈடு வாரியம் உத்தரவிட்டது. எனவே அவருக்கு அந்த தொகை வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here