கும்பகோணம், ஜூன். 15 –
பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவில் சுவாமியை யார் தூக்குவது என்ற பிரச்சனையில் அப்பகுதியில் உள்ள இரு பிரிவினரிடையே (வன்னியர் மற்றும் முத்தரையர்) நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி பூரணி ஜீப் கல்வீசி உடைக்கப்பட்டது. மேலும் இம்மோதலில் இரண்டு வீடும் மற்றுமொரு கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் ராஜ்கமல் என்ற காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து ராஜகிரி பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.





















