தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் ரோபாக்ஸ் மற்றும் நீர் டாக்சி சேவைகள் – மத்திய இணையமைச்சர் சாந்தனு தாக்கூர்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்
பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள்
இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கீழ்காணும் தகவல்களை
அளித்தார்.
நீர்வழி போக்குவரத்து என்பது செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் நிலையில், ரோபாக்ஸ் திட்டங்களை
பல்வேறு வழித்தடங்களில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் 7 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 14 திட்டங்கள் செயல்படுத்துதலின் கீழும் 50 திட்டங்கள் உருவாக்கத்திலும் (மொத்தம் 70) உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 3 திட்டங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வெளியிட்டது.
பெறப்பட்டுள்ள ஆலோசனைகளை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வருகிறது. இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021 ல்
அவை முறையாக சேர்க்கப்படும். சில மாநில அரசுகளிடம் இருந்து
ஆலோசனைகள் இன்னும் வரவில்லை.
திறன் இடைவெளி ஆய்வு 21 கடலோர மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டது. துறைமுகம் மற்றும் கடல்சார் துறைக்கு சிறப்பு
கவனம் வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உற்பத்தி ஆகிய
துறைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை இருப்பது
ஆய்வில் கண்டறியப்பட்டது.
பல்திறன் மேம்பாட்டு மையத்தை விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் நிறுவ முடிவெடுக்கப்பட்டது. செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பங்குதாரரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள கட்டிடம் பங்குதாரரிடம் வழங்கப்பட்டு விட்டது.
புதுவைக் கடற்கரையில் பலூன் வியாபரியின் 4 வயது பெண் குழந்தை திடீரென மாயம் : காவல்துறையினர் தீவிர விசாரணை...
புதுவை, பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் ...
புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 26). இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் புதுவை கடற்கரை சாலையில் பலூன், பொம்மை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
https://youtu.be/joBWry-9sM0
இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று...
குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கான நிதியுதவிகள் : மாநிலங்களவையில்அமைச்சர் நாராயண் ரானே தகவல் !
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக இத்துறையின் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ரூ.20,000 கோடி மதிப்பில் துணை கடன்.
* எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் உட்பட தொழில்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் கோடி உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள்.
* எம்.எஸ்.எம்.இ. நிதி மூலம் Rs.50,000 கோடி பங்குத் தொகை உட்
செலுத்துதல்.
* இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கிக்கு (SIDBI) ரூ.15,000 கோடி
சிறப்பு மறு நிதியளிப்பு வசதி.
* சிறு நிதி நிறுவனங்கள் மூலம், 25 லட்சம் பேருக்கு கடன் உத்திரவாதத்துடன் கூடிய வசதி.
* இந்த நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு பணப் புழக்க திட்டம்.
* வங்கி சாரா நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்களுக்கு
ரூ.90,000 கோடி கடன் உத்திரவாத திட்டம்.
கொரோனா பாதிப்பு காரணமாக, வரி செலுத்துவோர் சந்தித்த சவால்களை கருத்தில் கொண்டு,
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உட்பட பல தொழில் நிறுவனங்களுக்கு வரி தொடர்பான பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
* வரிச்சட்டங்களின் கீழ் பல இணக்கங்களுக்கு கால வரப்பு நீட்டிக்கப்
பட்டது.
* விவாத் சே விஸ்வாஷ் சட்டத்தின் நேரடி வரியின் கீழ் வரித்தாக்கலுக்கான தேதி நீட்டிப்பு.
* பெருநிறுவன வரிகள் திருப்பி செலுத்தப்பட்டன.
* வருமானவரி சட்டத்தின் கீழ் வரிப்பிடித்தம் கூறும் தகுதியான
தொடக்க நிறுவனங்களுக்கு இணைப்பு தேதி நீட்டிக்கப்பட்டது.
* வருமானவரி சட்டத்தின் 6ஏ பி பிரிவின் கீழ் பலவிதமான
முதலீடுகளுக்கு வரிப்பிடித்தம் கோருவதற்கான
கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டது.
* தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் என்ற வட்டிக்கு பதிலாக வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
காதி இயற்கை வண்ணப்பூச்சு தொடக்கம்:
காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு, பசுஞ்சாணத்திலிருந்து, ஜெய்ப்பூரில் உள்ள குமரப்பா தேசிய கைவினை காகித மையத்தால் (KNHPI) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜெய்ப்பூரில் உள்ள காதி மற்றும் கிராம தொழில்
ஆணையத்தின் ஆலை. காதி பிரகிரதிக் வண்ணப்பூச்சு சுற்றுச்
சூழலுக்கு உகந்தது மற்றும் மலிவானது என குமாரப்ப காகித மையம்
நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காதி வண்ணப்பூச்சு, காசியாபாத்தில் உள்ள தேசிய பரிசோதனை
மையம், மும்பையில் மத்திய அரசின் தேசிய பரிசோதனை மையம்,
தில்லியில் உள்ள ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில்
பரிசோதிக்கப்பட்டது. வண்ணப்பூச்சுக்கு தேவையான அளவுருக்களை இது நிறைவு செய்துள்ளது.
காதி வண்ணப்பூச்சுக்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்படுவது, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும், கிராமங்களில் நிலையான வேலைவாய்ப்பை
உருவாக்கும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை பெற்று தரும்.
அபிநந்தனுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது
மும்பை:
அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த...
மறுமணம் செய்த பெண்ணின் அந்தரங்க காணொளிக் காட்சியை அவரது மகனுக்கு அனுப்பி மிரட்டிய மனைவி உட்பட பல பெண்களை...
புதுச்சேரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு...
தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் : ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் ...
சென்னை, மார்ச். 29 -.
ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி,...
உணவுப் பொருட்கள் உள்ளதா என சோதனை செய்து பாரதி பூங்காவிற்குள் அனுப்பிய நகராட்சி ஊழியர்கள் : புதுச்சேரி பொதுமக்களிடம்...
புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி பாரதி பூங்கா நுழை வாயிலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த உணவு சார்ந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...
போலி இன்வாய்ஸ்கள் மூலம் ரூ.4500 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுப்பட்ட 636 நிறுவனங்கள் … மூளையாக செயல்பட்டவர் கைது...
டெல்லி, ஜன. 14 -
ரூ 4,500 கோடிக்கும் அதிகமான போலி இன்வாய்ஸ்கள் தொடர்பான கும்பலை ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சில போலி நிறுவனங்களுக்கு எதிராக ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தால் சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த போலி நிறுவனங்களுக்குப்...
மீனவர்களுக்கு உதவ வேண்டும்: லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் உத்தரவு
லட்சத்தீவு, நவ, 1 -
மீனவர்களுக்கு உதவ, விற்பனைத் துறையில் புதுமையான மற்றும் அறிவியல் பூர்வ யோசனைகளை பின்பற்ற வேண்டும் என லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் உத்தரவிட்டார்.
லட்சத்தீவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் எல். முருகன் நேற்று...




















