புதுச்சேரி, மார்ச். 11 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்

புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன் தற்கொலை நாடகமாடி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதான கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் தனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய விவேகானந்தன் குளிக்கும் சோப் முழுங்குவது, மூக்கை நீண்ட நேரம் பிடித்துக் கொள்வது, சட்டையால் முகத்தை அழுத்திக்கொள்வது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை பல்வேறு விதமான தற்கொலை முயற்சிக்கான நாடகத்தை  மேற்கொண்டதாகவும் சிறை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here