காஞ்சிபுரம், ஆக. 05 –

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பல கோவில் வளாகம் அருகாமையிலும், சாலை ஓரம் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகளை சிறு வியாபாரிகள் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு கடைகளை அகற்ற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை காலி செய்யாத காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில கடைகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் கடைகளை அகற்றினர்.

மேலும், பல கடைகளை அகற்றாமல் வியாபாரிகள் தொடர்ந்து இருந்து வந்ததால் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் நடைபாதையை ஆக்கிரமித்தும், சாலைகளை ஆக்கிரமித்தும் இருந்த கடைகளை அகற்றினர்.

கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் சில கடைகாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here