தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரியை அடுத்துள்ள ஈச்சங்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம்.. அவர் அப்பகுதியில் மெக்கானிக்காக பணிசெய்து வருகிறார். மேலும் இந்நிலையில் இன்று அவர் அப்பகுதியில் இருக்கும் காலி மனை அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிவானந்தம் என்கின்ற சிவாவிடம் தகராறு செய்தநிலையில் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் சிவாவை சரமாரியாக வெட்டிவுள்ளனர்.
அதில் நிலைக் குலைந்த தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது. . அத்துயரச் சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிவா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முதற் கட்ட தகவலில் அப் பகுதியில் நடைப்பெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறின் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் சிவானந்தம் என்கின்ற சிவாவை வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அதுக்குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடி தலைமறைவான 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக வலை வீசி தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.






















