தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்,
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மகர்நோன்புசாவடி பகுதியில் அதிமுக கவுன்சிலர் கேசவன் ஏற்பாட்டில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது, இந்த மருத்துவ முகாமினை அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் ரத்த அழுத்தம், நீரிழிவு, இசிஜி, எக்கோ, பல் சிகிச்சை, இருதய பரிசோதனை உள்ளிட்ட பொது மருத்துவம் ஆகியவை பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது,
மக்கள் நலப்பணியுடன் நடைப்பெற்ற அவ்விழாவில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன், அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கைப் பரப்பு துணை செயலாளர் திருஞானம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.