கும்பகோணம், அக். 22 –

கும்பகோணத்தில் வணிகவரித்துறை பறக்கும் படையினர் புறவழி சாலையில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ் வழியாக உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்குகளை ஏற்றி வந்த வாகனங்கள் பிடிப்பட்டன.

கும்பகோணத்தில் நகர பகுதிகளில் வரி ஏய்ப்பு செய்து பொருட்களை எடுத்து செல்வதாக வணிக வரித்துறைக்கு வந்த ரகசிய தகவலின் படி  வணிகவரித்துறை பறக்கும் படை மாநில வரி அலுவலர் நடராஜன் தலைமையில்  துணை மாநில அலுவலர் பாலாஜி அசூர் பைபாஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்த போது அந்த பகுதி வழியாக பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை  செய்தனர்.

அச்சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் வரி ஏய்ப்பு செய்து இரும்பு பொருட்கள், பர்னிச்சர், முந்திரி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற வாகனங்களை சோதனை செய்ததில் பல வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை எடுத்து சென்றது தெரியவந்தது.

மேலும் சில பொருட்களை பழைய ஆவணங்களை வைத்துக் கொண்டு எடுத்து சென்றதும் தெரியவந்தது. பின்னர் வரி ஏய்ப்பு செய்து எடுத்து சென்ற பொருட்களுக்கு உண்டான வரித் தொகையுடன் அபராத தொகையையும் ஆன்லைன் மூலம் வசூல் செய்து அதற்கு உண்டான ரசிதை காண்பித்த பின்னரே வாகனங்களை எடுத்து செல்ல அனுமதித்தனர்.

இச் சோதனையில் மட்டும் ஆன்லைன் மூலம் ரூ.28 ஆயிரத்து 500 வரி மற்றும் அபராத தொகை கிடைத்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here