தஞ்சாவூர்,ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் தென்மாநிலங்களில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.
அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த சேஸ்த்ரா அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான இவர், உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்தை கண்டு வணங்கியும் மற்றும் ஸ்ரீ பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனமும் செய்தார், அதனைத் தொடர்ந்து தஞ்சை மேலவீதியில் உள்ள ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்,
அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார், இவரின் பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்