ராமநாதபுரம் மாவட்ட ஆணழகன் போட்டி, மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை தட்டி சென்ற வங்கி மேலாளர்
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆணகழகன் போட்டியில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளரான பாலமுருகனுக்கு மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஆணகழகன் பாஸ்கரன் வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், ராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது...
ராமநாதபுரத்தில் த.மு.மு.க., சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் தின நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
ராமநாதபுரம் த.மு.மு.க., சார்பில் புனித ஹஜ் (பக்ரீத்) பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உலக முஸ்லிம்களால் ஈகை திருநாளாக புனித ஹஜ்...
ராமநாதபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கம்,ஒரே பொது பெயரில் அரசாணை வெளியிட வலியுறுத்தல்
ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரத்தில் அனைத்து தேவந்திரகுல வேளாளர்கள் சங்கங்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில் தேவேந்திர குல வேளாளர்களின் 7 உட்பிரிவுகளை ஒரே பொது பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ராமநாதபுரத்தில் அனைத்து தேவேந்திரகுல...
ஒருங்கிணைந்த பொறியாளர் பணியாளர் தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரடி ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைப்பெற்ற தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் காவல்துறையில் 164 புதிய காவலர்கள் எஸ்.பி., ஓம்பிரகாஷ்மீனா வரவேற்பு
ராமநாதபுரம், ஆக. 10-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காவலர்களில் 164 காவலர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை செய்தனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா வரேவற்றார்.
தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம் ஆண்டு...
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட.. எஸ்டிபிஐ கட்சியினர் 122 பேர் கைது
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய...
ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி எஸ்.பி., ஓம்பிரகாஷ்...
ராமநாதபுரம், ஆக.10-ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமை வகித்து கொடிசையத்து துவக்கி வைத்தார்.
ராமநாதபுரத்தில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள்...
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடி ஆய்வு
ராமநாதபுரம், ஆக. 10- ராமாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார், ஆய்ங்குடி, ஓடக்கரை மற்றும் காத்தனுார் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்கம் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று...
ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் 530 மரக்கன்றுகள் நடும் விழா – டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார்மீனா துவக்கி வைப்பு
ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி தனி ஆயுதப்படையில் 10 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடும்பணியை டிஐஜி ருபேஷ்குமார் மீணா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை...
ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்
பெரியபட்டினம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 118ம் ஆண்டு மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது.
ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மாலை 4:30 மணிக்கு தொடங்கி மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகளின்...














