ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், இவைகளை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ராமநாதபுரம் ரயில் நிலையம் முன்பாக எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தி ரயிலை மறிக்க முயன்று ஊர்வலமாக சென்றனார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகைக்கு முயன்ற 122 பேரை கைது செய்துனர். முற்றுகை போராட்டத்திற்கு  எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்ட துணை தலைவர் சோமு தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கண்டன உரையாற்றியபோது, சிறுபான்மை இன மக்களை பழிவாங்கும் நோக்கத்தில்  சட்டத்திருத்தம் கொண்டு வருவதும்,காஷ்மீர் சுயாட்சிக்கு எதிராக 370 சட்ட பிரிவை ரத்து செய்ததையும் எஸ்.டி.பி.ஐ., கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இச்செயலுக்கு எதிராக தேசியம் முழுவதும் எங்கள் கட்சியினர் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு உடனடியாக தேசிய புலனாய்வு ஏஜன்ட், ஆர்.டி.ஐ. சட்டத்திருத்தம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். காஷ்மீரில் 370 சட்டபிரிவை அமல்படுத்த வேண்டும், என்றார்.
மாவட்ட பொது செயலாளர் செய்யது இப்ராகிம் கண்டன கோஷங்களை எழுப்பினார். போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டவாறு ரயில்நிலையம் நோக்கி சென்று முற்றுகையிட்டு ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை ராமநாதபுரம் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லையோலா இக்னீசியஸ் தலைமையில் ராமநாதபுரம் டி.எஸ்.பி., நடராஜன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டவர்களை கைது செய்து ஒரு திருமண மகாலில் வைத்திருந்து பின் விடுவிக்கப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here