இராமநாதபுரம், அக். 14 –
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியராக திரு. சங்கர்லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி. சந்திரகலா நீண்ட விடுமுறையில் சென்றதால், பொறுப்பு மாவட்ட ஆட்சியராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு. காமாட்சி கணேசன் கூடுதலாக அப்பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை வனிகவரி இணை கமிஷனராக அதிக வரி செலுத்துவோர் பிரிவை கவனித்து வந்த சங்கர்லால் குமாவத் ஐ.ஏ.எஸ் அப் பணியில் இருந்து மாறுதல் செய்து இன்று தமிழக அரசு ராமநாதபுரத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளது.