ராமநாதபுரம், ஆக. 10– ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி தனி ஆயுதப்படையில் 10 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடும்பணியை டிஐஜி ருபேஷ்குமார் மீணா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை அலுவலகங்கள், மற்றும் மாவட்ட காவல் அலுவலகம் ஆகிய இடங்களில் குறைந்தது தலா 5 மரக்கன்றுகள் நட்டு சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பராமரிக்க காவல்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் ருபேஷ்குமார் மீணா வழிகாட்டுதலின் படி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம், அனைத்து காவல் நிலையங்களில் 280 மரக்கன்றுகளும், ஆயுதப்படையில் 150 மரக்கன்றுகளும், கமுதி தனி ஆயுதப்படையில் 100 மரக்கன்றுகளும் என மொத்தம் 530 மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணியின் தொடக்கமாக ராமநாதபுரம் ஆயுதப்படையில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் ரூபேஷ்குமார் மீணா மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் போலீஸ் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப்பணியாளர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.