ராமநாதபுரம், ஆக.10-ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ராமநாதபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமை வகித்து கொடிசையத்து துவக்கி வைத்தார்.
ராமநாதபுரத்தில்  பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரம் அரண்மனையில் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீான கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) லையோலா இக்னீசியஸ், குழந்தைகள் நல அலுவலர் துரைராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் உதவி மைய இயக்குனர் கருப்பசாமி, உட்பட பலர் பங்கேற்றனர். சுமார் 300 மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணியானாது அரண்மனையில் துவங்கி சென்டர் கிளாக் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சுவார்ட்ஸ் பள்ளியில் முடிந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here