ராமநாதபுரம், ஆக. 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஆணகழகன் போட்டியில் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளரான பாலமுருகனுக்கு மிஸ்டர் ராம்நாடு பட்டத்தை மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்ற ஆணகழகன்  பாஸ்கரன் வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்,  ராமநாதபுரம் கிராவிட்டி பிட்னெஸ் ஸ்டுடியோ சார்பில் 17 வது மிஸ்டர் இராம்நாடு மாவட்ட ஆணழகன் போட்டி  நடைபெற்றது. தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் நூர்முகமது, கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேஷ கண்ணன், தொழிலதிபர்கள் ஆஷிக், ராஜா முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் ஆனந்தன் வரவேற்றார். 55, 60, 65, 70, 75 எடை பிரிவுகளில் தலா 10 பேர் கலந்து 8 கட்டங்களாக தங்கள் உடல் கட்டமைப்பு திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 பேர் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்றிடம் பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல ஆணழகன் உருவச் சிலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 4, 5 இடங்களை பிடித்தவர்களுக்கு நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.  55, 60, 65, 70, 75 கிலோ எடை பிரிவு களில் முதல் இடம் பிடித்த 5 பேர் சாம்பியன்ஸ் ஆப் தி சாம்பியன் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகினர். இதில் 70 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற பாலமுருகன் மிஸ்டர் ராம்நாடு மாவட்ட ஆணழகனாக, நடுவர்கள் மதுரை அயர்ன் போஸ், தேசிய நடுவர் மயில்சாமி, மாநில நடுவர்கள் சுந்தரமூர்த்தி, முத்துக்குமார், சுதன் ஆகியோரால்  தேர்வு செய்யப்பட்டார். ஆணழகனாக தேர்வான  தமிழ்நாடு கிராம வங்கி ஏர்வாடி கிளை மேலாளரான பாலமுருகனுக்கு, மிஸ்டர் வேர்ல்டு  பட்டம் பெற்ற பாஸ்கரன் சாம்பியன் பட்டத்தை வழங்கி கவுரவித்தார். பொருளாளர் போரீஸ்டன் நன்றி கூறினார். மாவட்ட துணை பொதுச் செயலாளர் உதயகிரி,  நிர்வாக துணைத் தலைவர் விஸ்வநாதன், செயல் தலைவர்  ராஜசேகர், போஸ்ட் மாஸ்டர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here