கொளத்தூரில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
மாதவரம்:
கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில்...
பணியில் இல்லாத விஏஓக்கள் சஸ்பெண்டு- சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் நெல்லை கலெக்டரின் பேச்சு
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தாசில்தார்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுதொடர்பான அவருடைய பேச்சு ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-
கிசான் யோஜனா திட்டத்தில் (பிரதமர் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்...
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் பாஜகவில் இணைந்த 70 க்கும் மேற்பட்ட பெண்கள் ..
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு...
ரூ.2 ஆயிரம் பணம் நிச்சயமாக ஏழைகளுக்கு போய் சேராது-இளங்கோவன்
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள மேட்டூரில் இ.காங்கிரஸ் சார்பில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பா.ஜனதாவினர் இந்திய வீரர்கள் 40 பேர்...
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை மீட்க கோரி பொன்னேரி கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு வழங்கிய ...
சோழவரம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஓரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 82 செண்ட் புறம்போக்கு நிலத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு...
ராசிபுரம் : பட்டணம் சக்திநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே...
இராசிபுரம், ஜூலை. 20 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில்...
ஆப்பக்கூடல் அருகே விபத்து-15 மாணவர்கள் காயம்
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு இன்று காலை அரசு டவுன்பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் பயணிகள், மாணவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.
இந்த பஸ் இன்று காலை 9.15 மணியளவில் ஆப்பக்கூடல் அருகே கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஒருவளைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது...
ஆண்டிப்பட்டி கோவில்களில் சாமி தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஆண்டிபட்டி; ஜூலை. 15 -
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணம் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட...
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது-தினகரன் ஆரூடம்
சத்தியமங்கலம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?
விவசாய விளை...
காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சி : ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் …
காஞ்சிபுரம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில், இன்று அறிவியல் கண்காட்சி மற்றும் தமிழர் பண்பாடு குறித்த கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அக் கண்காட்சியில் தமிழ் மரபு சார்ந்த பொருட்களும் மற்றும் கணினி, இயற்பியல் உள்ளிட்ட...





















