நம்புதாளையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது
இராமநாதபுரம், ஆக.4 –
இராமநாதபுரம் மாவட்டம், தேசிய மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு அமைப்பின் இராமநாதபுர மாவட்ட கிழக்கு, மேற்கு நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞரும், தூதருமான ஜமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. மண்டல பொறுப்பாளர் முஹம்மது ரில்வான், மாநில இணைச் செயலாளர்கள் சுந்தரம், ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில இணைச் செயலாளரும் வளைகுடா வாழ் தமிழர்கள் நலச் சங்கத்தின் நிறுவனருமான நம்புதாளை பாரிஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக திருவாடானை டி. எஸ். பி.இராமகிருஷ்ணன் கலந்துகொண்டு வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்க அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் மனித உரிமைகள் சமூக நீதி பாதுகாப்பு மூலம் பொது மக்களுக்கு சேவையாற்றுவதை பாராட்டி பேசினார். இதில் மூன்று மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் முகமது முஸ்தபா, மாவட்டச் செயலாளர் முஹம்மது ஜியாது உட்பட மண்டல, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் வளைகுடா வாழ் தமிழர்களின் மாநில பொதுச்செயலாளர் வாசு.ஜெயந்தன் நன்றி கூறினார்.