ஊத்துக்கோட்டை, ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி …

ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் 1994 ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் குழுவின் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப் படும் பொதுமக்களின் தாகம் தீர்த்திடும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் விழா நடைபெற்றது.

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களின் நலன் கருதி ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்  1994 ஆம் ஆண்டு பயின்ற பத்தாம் வகுப்பு முன்னாள் மாணவர்கள் குழுவின் சார்பில் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஊத்துக்கோட்டை C1 காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு மோர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியினை 1994 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு அமைப்பாளரும் சமூக அர்வலருமான கவுஸ்பாஷா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். மேலும் இந்நிகழ்வில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here