சென்னை, அக். 30 –
இன்று பசும்பொன் தேவரின் பிறந்தநாள் மற்றும் ஜெயந்தியாகும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பொன்மொழிகளை சுட்டிக்காட்டி அன்னாரை போற்றும் வகையில் அவர் வழங்கிவுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாழ்த்து செய்தி
நான் பேசுவது எழுதுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காக தவிர எனக்காக அல்ல என்று வழ்ந்தவர் பசும் பொன் தேவர் திருமகனார் தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர்.
மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை செலுத்த வேண்டுமே தவிர சாதியால் அல்ல என்று சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் திருமகனார் அனைவருக்குமான தலைவர் அவர்…
பக்குவப்பட்ட ஒருவன் இந்து கோவில் காட்டுகின்ற தீப வெளிச்ச்சத்தையும் – கிறுத்துவ வளாகத்தில் வைக்கிற மெழுவர்த்தி ஒளியையும் – முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டைப் போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாக காண்பான் என்று சொன்ன மத நல்லிணக்க மாமனிதர் ..
தனியாக இருக்கும் போது சிந்தனை செய்வதில் கவனம் செலுத்துங்கள் கூட்டத்தோடு இருக்கும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என்று சொன்ன தத்துவ ஞானி அவர் ..
நேரம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் , அதே நேரத்தில் எறும்பு கடிக்கும் போது கோபம் வராமல் வருடிக் கொடுக்கும் பொறுமைக் குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இலக்கணம் வகுத்த அரசியல் மேதை அவர் ..
முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ் என்று முழங்கிய தமிழ் ஆளுமை, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் முன் மொழிந்த இந்த முத்து மொழிகளை பின்பற்றி நடப்பதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி .. வாழ்க அவரது புகழ்.. வெல்க அவரது சிந்தனைகள் என அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய போது, உடன் அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
மதுரை கோரிப்பளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார் உடன் அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.