சென்னை ஆக, 1 –

தமிழ்நாடு அரசு வரலாற்றிலயே முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து இன்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன் தரத்தக்க வகையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையும், விவசாயத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும். என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த இந்த உறுதி மொழியை நிறைவேற்றும் எண்ணத்தில் உறுதியாக உள்ளதால் அதற்கான முன்னேற்பாடாக அமைச்சர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தியுள்ளதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள் விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்கள் உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

அது போன்று பொது நிதிநிலை அறிக்கையினைப் பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு குறு மற்றம் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து அவர்களிடமிருந்து பெறப் பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையினைத் தாயாரிக்க முதலமைச்சர், அமைச்சர்களையும் அரசு உயர் அலுவலர்களிடமும் அறிவுறுத்தி வுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here