திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழ்மொழி அழகானது மட்டுமல்ல, மிகவும் தொன்மை வாய்ந்தது எனவும் மேலும் இம்மண் சித்தர்கள், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் வாழ்ந்த பண்பாட்டு வளமும், தெய்வீகமும் நிறைந்தது. மேலும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் வாழ்ந்த மண் எனக் குறிப்பிட்டார்.
நமது பாரத பிரதமர் தமிழ்நாட்டின் பெருமையை நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நீதி மற்றும் சுதந்திரத்தின் சின்னமான செங்கோலை நிறுவியதிலிருந்து நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் செங்கோல் பற்றி விழிப்புணர்வு அடைந்துள்ளனர் என்றார்.
மேலும் மகா கவிஞரான சுப்பிரமணிய பாரதியின் நினைவாக அவரது பிறந்த டிசம்பர் 11ம் தேதி தேசிய மொழி தினமாக நமது பாரத பிரதமர் அறிவித்துள்ளார்.எனவும் மேலும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் பெரிய மாற்றங்களை பாரத பிரதமர் நரேந்திரமோடி தந்துள்ளார்.
இன்றைக்கு இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார முன்னேற்றம் கொண்ட நாடாக மிளிர்ந்துள்ளது. உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா மாறியுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிறிய அளவிலான பாதுகாப்பு பொருள்களை கூட வெளியில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலை மாறி தற்போது விமானம் தாங்கி போர்க்கப்பல் போன்ற பெரிய அளவிலான பாதுகாப்பு பொருள்களை தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நம்நாட்டின் வளர்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி உயர்த்தியுள்ளார். என்றார்.
2014ம் ஆண்டில் வெறும் 600 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு தளவாடப் பொருள்களின் ஏற்றுமதி இன்று 26 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் பேசிய ராஜ்நாத்சிங், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பொதுமக்களிடம் இருந்து பெருமளவு பணத்தை பல்வேறு நிலைகளில் சுரண்டி ஊழல் செய்தார்கள். இன்றைக்கு இந்தியாவில் 80 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுங்சாலைகள் தவிர நாடு முழுவதும் பல லட்சம் கிலோ மீட்டர் அளவிற்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டு கிராம புற மக்களின் நலன் பாதுகாக்கப் பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
2014ம் ஆண்டுக்கு பிறகு 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மக்கள் நலனுக்காக விரைவாக கட்டப்பட்டு வருகின்றன எனவும் மேலும் பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காகவோ, அரசாங்கம் அமைப்பதற்காகவோ அரசியல் செய்யவில்லை.
ஆனால் இந்தி கூட்டணி, பாஜகவையும் தேசிய ஜனநாயக கூட்டணியை தாக்குவதாகவும், இந்து மதத்தை அவமதித்து பேசி வருகின்றனர். இந்து மதம் எந்த சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ளதோ அதனை அழிக்க வேண்டும் என இந்தி கூட்டணியினர் சொல்லி வருகின்றனர். சக்தி என்றால் தமிழகத்தில் என்ன என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். கோட்டை மாரியம்மன், மதுரை மீனாட்சிஅம்மன், காஞ்சி காமாட்சியம்மன் முதலான அம்மன் தெய்வங்கள் சக்தியின் வடிவமாக திகழ்கின்றனர்.
இந்து மதத்தில் சக்தி என்றால் தாய் சக்தி என்று பொருள்.ஆனால் இந்தி கூட்டணியில் உள்ள திமுக தாய் சக்தியையும், பெண் சக்தியையும் அழிப்போம் என கூறி வருகிறது. இந்தி கூட்டணியில் உள்ள திமுக நமது தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதிப்பதோடு, இந்து கடவுள்களையும், தெய்வங்களையும் அவமதிக்க தொடங்கிவிட்டனர். அதற்கு தாய்மார்களும், சகோதரிகளும் அவர்களுக்கு தேர்தலில் தக்கபாடம் புகட்ட வேண்டும் என்றார்.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து கருத்துகளை தெரிவித்து வருகிறார் எனவும் மேலும் உதயநிதி சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா போன்ற கொசு எனவும் அதனை ஒழிக்க வேண்டும் என்கிறார்.
திமுக கூட்டணி பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்திலேயே எதிர்க்கிறார்கள். அதனால் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கு பெண்கள் வரும் தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நான் எப்போது தமிழகம் வந்தாலும் அப்போதெல்லாம் எனக்கு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் ஞாபகம்தான் வரும். எனவும் மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர். எனவும் ஏழைக்களுக்காக உழைக்க வேண்டும், ஏழைகளுக்கு கௌரவமான வாழ்க்கையினை வழங்குவது ஜெயலலிதா அம்மாவின் முக்கிய நோக்கமாக இருந்தது எனத் தெரிவித்தார்.
அதிமுகவின் தலைவராக அம்மா இருந்தாலும் அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது.இப்போதும் இருக்கிறது. அது எப்போதும் இருக்கும் என்றார்.
பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் தலைவர்களை வழங்கியது தமிழ்மண். இந்த தலைவர்கள் வழியில் பிரதமர் மோடியும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.என அப்போது அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசும், திமுகவும் இணைந்து கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்தால் நமது நாட்டு மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். எனவும் மேலும் இந்தி கூட்டணியானது தேர்தல் தொடங்குவதற்கு முன்பே உடைந்து கொண்டிருக்கிறது.
எனவே தமிழக மக்கள் தேர்தல் நேரத்தில் இந்தி கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட தயாராகிவிட்டனர்.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டனர். நமது நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் உங்கள் வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்க்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.