பாண்டிச்சேரி, ஏப். 05 –
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் E-Filing முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீதிமன்றங்களில் E-filing முறையில் வாழ்க்கைகளை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் நீதிமன்ற பணி வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணி புறக்கணிப்பில் புதுச்சேரியில் உள்ள 14 நீதிமன்றங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீதிமன்றங்களின் பணி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.