கும்மிடிப்பூண்டி, ஜூலை. 06 –
தமிழகம் முழுவதும் நேற்று பாஜக சார்பில் தேர்தலில் திமுக மக்களுக்கு கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஓராண்டுகள் ஆன பின்னும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றததை கண்டித்தும், அதனை நினைவுப்படுத்தும் வகையிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தியது.
அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ஒரு நாள் உண்ணாவிரத அறப்போராட்டம் பஜார் பகுதியில் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
மாநில நிர்வாகி பாலாஜி பத்மநாபன். அரசு தொடர்பு துறை மாநில செயலாளர் ஆர் சி பாலாஜி. உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் .கண்டன உரை நிகழ்த்த சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அரசு தொடர்பு துறை மாநில தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து வருவதாகவும், தேர்தலில் வாக்குறுதி அளித்தது போன்று டீசல் விலையை குறைக்க வேண்டும். மேலும், அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தவரிவிட்டதாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து, கடந்த மாதத்தில் மட்டும் 20 நாட்களில் 18 கொலைகள் நடைபெற்றதாகவும், லாக்கப் டெத்துக்கள் அதிகரித்து வருவதாகவும் கூறியவர் பாஜகவின் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதை திமுக அரசு நிறுத்த வேண்டும் இல்லையெனில் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக அரசசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்தனர்.
இதில் சோம ராஜசேகர். நாகமணி. கல்வியாளர் பிரிவு டாக்டர் .திருமலை உள்ளிட்ட திரளான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
























