மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச் செயலாளர் அணில் தேசாய் வழிகாட்டுதல்படி தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழுமையான ஆதரவை அளித்து இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அனைவரின் வெற்றிக்கு பாடுபடுவதற்கான ஆதரவு கடிதத்தை சிவசேனா தேசிய அமைப்பாளர் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் மும்பை டாக்டர் அண்ணாமலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் நேரில் சென்று ஆதரவுக் கடிதத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சி தமிழ்நாடு கமிட்டி தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் சுந்தர வடிவேலன், மாநிலத் துணைத் தலைவர் செந்தில் மாநில அமைப்பாளர் வேணுகோபால், மாநில பொருளாளர் சிவசங்கரன், மாநில செயலாளர் மாநில செயலாளர்கள் மனோஜ் குமார், சிங்காரவடிவேலன் மற்றும் மாநில நிர்வாகி பொன்னம்பலம், பிரதீப் குமார் ஆகியோர் நேற்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியிடம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிவசேனா கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கி சிவசேனா கட்சியின் ஆதரவை தெரிவித்தார்கள்.