திருவள்ளூர், ஏப். 30 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கணவர் கந்தன்குமாருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இடுப்புக்கு கீழே உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறி புகார் தெரிவிக்கை அப்பெண்மணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க வந்தார்.

மேலும் அம்மனுவில் மாவட்ட ஆட்சியர் அப்புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து தமது கணவனை மீண்டும்பழைய நிலைக்கு கொண்டு வந்து தரும்படியும் மேலும் மனநலம் குன்றிய மகன் மற்றும் மற்றொரு மகனின் வாழ்க்கை மேலும் கேள்விக்குறியாகி விடும் என்பதால் தாங்கள் அம்மனுவின் மீதான துரித நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டும் என தனது வாழ்வியல் நிலைக் குறித்து தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி என்ற பெண் தனது மனநலம் குன்றிய மகனுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

மேலும் அதில் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சாவித்திரி தனது கணவர் கந்தன்குமார்  மனநலம் குன்றிய நவீன்குமார் என்ற 14 வயது மகன் மற்றும் புவனேஷ் என்ற 9 வயது மகனுடன் தாம் வாழ்ந்து வருவதாகவும், மேலும் இதுவரை தனது கணவர் கந்தன்குமார் கூலி வேலை செய்து வந்ததின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மனநலம் குன்றிய நவீன் குமாருக்கு தேவையான சிகிச்சை அளித்து தனது குடும்பத்தை காத்து வந்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிலையில் கந்தன்குமாருக்கு ஏற்பட்ட தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம், மேலும் கணவர் கந்தன்குமாருக்கு மார்ச் மாதம் 23 ஆம் தேதி வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறி முதுகு தண்டு வடத்தில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனை அடுத்து முதுகில் செலுத்தப்பட்ட மயக்க ஊசியில் இருந்த நீடில் சுமார் 8 சென்டிமீட்டர் அளவில் முதுகில் அருந்து விட்டதாகவும், மேலும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தனது கணவரை மேல் சிகிச்சைக்காக அனுமதித்து முதுகு தண்டுவடத்தில் இருந்த 8 சென்டிமீட்டர் நீடிலை அகற்றி அங்கு அகற்றி உள்ளதாகவும், மேலும் அச்சிகிச்சையினால் தற்போது எனது கணவர் கந்தன்குமாரின் உடலில் இடுப்புக்கு கீழே உள்ள உடல் உறுப்பு வேலையிழந்து உள்ளதாக கந்தன் குமாரின் மனைவி சாவிரித்திரி தெரிவித்துள்ளார்.

இதனால் எனது கணவரின் வயிற்று வலிக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் முதுகில் தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டு எனது கணவரின் உடல் உறுப்புக்கள் செயல் இழக்க காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினந்தோறும் கணவரின் கூலியை நம்பி குடும்பத்தை நடத்தி வந்த நாங்கள் தற்பொழுது கையேந்தும் நிலைமைக்கு சென்று விட்டதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கந்தன்குமாரின் மனைவி கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்

மேலும் பாதிக்கப்பட்ட கந்தன்குமாரின் இளைய மகன் புவனேஷ் என்னுடைய அப்பாவிற்கு வயிற்று வலியால் மருத்துவமனையில் சேர்த்தோம் ஆனால் இப்ப தப்பான சிகிச்சை அளித்து எங்க அப்பா நடக்க முடியாமல் இருக்கார் அவரை எப்படியாவது நடக்க வைக்கணும் எங்க அப்பா பழைய மாதிரி எனக்கு வேணும் அப்படின்னு அழுதபடியே பேட்டி அளித்த காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்றால் அது மிகையாகாது.

மேலும் பாதிக்கப்பட்ட கந்தன் குமாரின் மனைவி சாவித்திரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கரை சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்

பேட்டி : சாவித்திரி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here