தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூரில் கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் தங்களது தனித் திறமைகளை வெளிப் படுத்தினார்கள்.
மிகுந்த விறு விறுப்புடன் நடைப்பெற்ற அப் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் 150 மாணவர்களுக்கு கலர் பெல்ட் ஆகியவையும் வழங்கப்பட்டது,
அந்நிகழ்ச்சியில், தென்னிந்திய கராத்தே கழகத் தலைவர் அன்பரசன், கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழக பொருளாளர் ஆபிரகாம் ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டு வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவில் பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டு அவ்விழாவினை சிறப்பித்தனர்.



















