ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணம் போலாங் மோங்கோண்டவ் நகரில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்தது. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த சுரங்கத்தில், நேற்று முன்தினம் மாலை தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் 3 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 13 பேரை பத்திரமாக மீட்டனர். சுமார் 60 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை மீட்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here