மீஞ்சூர், ஆக. 16 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி அம்மாணக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக 77 வது சுதந்திர தினவிழாவினை அச்சங்கத்தினர் கொண்டாடினார்கள்.
மேலும், சங்கத் தலைவர் சித்தரஞ்சன், துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், பொருளாளர் பண்டரிநாதன் துணை செயலாளர் ஏழுமலை இயக்குனர் ராஜகோபால் நாடார் முதன்மை ஆலோசகர் சுப்பிரமணி இயக்குனர்கள் எல்லப்பன், தாஸ் அப்பன், சங்கர்ராமன், ரமேஷ், தினகரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, பொது நலச்சங்கம் செயலாளர் ஷேக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், மீஞ்சூர் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சுகுமார், ஆவடி காவல் உதவி ஆணையர் குமரேசன், மீஞ்சூர் ஆய்வாளர் காளிராஜ், உள்ளிட்டவர்கள் மீஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் நடைப்பெற்ற அரசுப்பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளிகளுக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெருமைச்சேர்த்த 53 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி அவர்களை தொடர்ந்து உயர் கல்விகளிலும் அவர்கள் அனைவரும் அச்சாதனைகளை தொடர வேண்டும் என வாழ்த்து மற்றும் பாரட்டு தெரிவித்து ஊக்கப்படுத்தினார்கள்.
இச்சிறப்பு மிகு விழாவில் தொழிலதிபர் அல்டாப் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள், அவ்வூர் மக்களென திரளானவர்கள் பங்கேற்றனர்.



















