சென்னை, ஜூலை 31 –
மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் அணையின் கிழக்குக் கரை கால்வாய் பாசனப்பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் மேற்குக்கரை கால்வாய் பாசன்பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து 1.8.2021 முதல் 15.8.2021 வரை தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16.443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும் , நாமக்கல் மாவட்டத்தில் 11.327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பொதுப்பணித்துறை செய்தி வெளியிட்டுள்ளது.