அங்காரா:

துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.

அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப் எர்டோகன் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து அவர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தொடங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை போலீஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் என 77 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தற்போது மத குரு குலனுடன் தொடர்புடைய 1,112 பேரை கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here