தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை-கமல்ஹாசன்
ஆலந்தூர்:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.
எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்,...
விருதுநகரில் குஷ்பு போட்டி?
சென்னை:
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 9 தொகுதிகளில் தமிழ்நாட்டிலும், ஒரு தொகுதியில் புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்படும்...
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்- ஆளுநர் தொடங்கி வைத்தார்
சென்னை:
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி,...
7 பேர் விடுதலை விவகாரம் – மனித சங்கிலி போராட்டத்தில் மதிமுக கலந்து கொள்ளாது
சென்னை:
நக்கீரன் கோபால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை சந்திப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு வைகோ தர்ணா போராட்டம் செய்தார்.
போலீசார் அவர் மீது இந்திய தண்டனைச்...
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
சென்னை:
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை:
லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர்...
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்-அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
சாத்தூர்:
சாத்தூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் ரங்கநாதன், சுப்பையா பாண்டியன் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்தி...
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்-ஸ்டாலின்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகூட்டுடன் காடு கிராமத்தில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி இல்லை,...
தேர்தலில் போட்டியிட நல்லவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்-கமல்ஹாசன்
நெல்லை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பாளை பெல் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் சுகா தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு...
தேர்தல் நேரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குவது கண்டிக்கத்தக்கது-திருமாவளவன்
நெல்லை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: -
பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி...