திருத்துறைப்பூண்டி, மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
தமிழ்நாட்டிற்க்கு பல கல்லூரிகளை வழங்கிய ஆட்சி அ.இஅ.தி.மு.க அரசு. அக்கல்லூரிகளில் கஞ்சா போன்ற போதை பொருள்களை வழங்குவது திமுக அரசு. மக்களுக்கு அளித்த 520 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், ஆனால் தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரிக்க வழி வகுத்துள்ளதாகவும், திமுக அரசு மீது குற்றம் சாட்டி, அச்செயலைக் கண்டித்து அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கண்டன உரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது தமிழகம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும் இருந்தது.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது எனவும், மேலும் நாம் படிக்கும் காலங்களில் பள்ளி வாசலில் ஐஸ் விற்பார்கள் ஆனால் தற்போது ஐஸ்வுடன் சேர்த்து கஞ்சா விற்கின்றார்கள் என திமுக அரசை சாடினார்.
அதனால்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பள்ளி கல்லூரிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சாமனிய மக்களின் வருமானம் பறி போகிறது என்ற காரணத்திற்காக லாட்டரி விற்பனையை தடை செய்தார்.
டெல்டாவிற்கு உரிமையான காவேரி பிரச்சனையில் மேகதாதுவில் அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு திமுக அரசு கண்டனங்களை தெரிவிக்கவில்லை. கல்லூரிகளை நாம் தந்தோம் அங்கு கஞ்சா விற்பனையை இவர்கள் செய்கின்றனர் எனத் தொடர்ந்து திமுக அரசு மீது குற்றம் சாட்டினார்.
மேலும் அவ் ஆர்பாட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் சிவராஜமாணிக்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் வாசுகிராம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் ஜெயபுவனேஸ்வரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வீ.சின்னராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட மகளிர் அணி, மாணவர் அணி உள்பட பிற அணி மாவட்ட செயலாளர்கள், நகர,பேரூர் கழக செயலாளர்கள், திருவாரூர் மாவட்ட ஒன்றிய கழகச் செயலாளர்கள், பிற அணி ஒன்றிய,நகர,பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டினை திருத்துறைப்பூண்டி நகர கழகச் செயலாளர் சண்முகசுந்தரம் செய்திருந்தார்.
திருவாரூர் நகர மன்ற உறுப்பினர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் நன்றி கூறினார். ஏராளமான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகழக தொண்டர்கள் பலர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.





















