சென்னை:
லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சம் வாங்குவது குறையும்.
கடும் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும். லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.